Pudhukottai | Cmvijay | முதலமைச்சர் வருகை மீண்டும் உயிர்பெறும் புங்கை மரம்

முதலமைச்சர் வருகை மீண்டும் உயிர்பெறும் புங்கை மரம்

முதலமைச்சர் வருகை மீண்டும் உயிர்பெறும் புங்கை மரம்

#cmvijay #pudhukottai

புதுக்கோட்டையில் இடமாற்றம் செய்யப்பட்ட புங்கை மரம் பட்டுப்போகாமல் வளர சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் விழாவிற்காக மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த புங்கை மரம், வேரோடு அகற்றப்பட்டது.

பின்னர், மரத்தின் வேர்களில் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் தடவி, பட்டுப்போகாமல் தொடர்ந்து செழித்து வளர்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, அதே ஆயுதப்படை மைதான வளாகத்தில் வேறு இடத்தில் புங்கை மரம் மீண்டும் நடப்பட்டது.

X