சென்னை மெட்ரோ ரயில் பணியில் ராட்சத தூண்களை தூக்கும் போது நேர்ந்த துயரம்
மெட்ரோ ரயில் பணியின்போது விபத்து - இளைஞர் உயிரிழப்பு
சென்னையில் மெட்ரோ ரயில் பணியின்போது ஏற்பட்ட விபத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிக்கி குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
சென்னை மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் மெட்ரோ தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராட்சத சிமெண்ட் தூண்களை மேலே கொண்டு சென்றபோது, அந்த தூண்களில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த பிக்கி குமாரும், சந்தோஷ் லக்காரா என்ற இளைஞரும் தவறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த பிக்கி குமார் உயிரிழந்தார். சந்தோஷ் லக்காரா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
