அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர்கள் - பொதுமக்கள் வேதனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, ஆற்று மணல் ஏலம் விட போது, அளவுக்கு அதிகமாக டிராக்டரில் மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தச்சூர் ஆற்றுபடுக்கையில், பொதுப்பணி
துறை சார்பில் ஆற்று மணல் ஏலம் விடும் நிகழ்வு பொதுப்பணி துறை மற்றும்
வருவாய் துறையை சேர்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, சிலர் டிராக்டர்களில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிச் சென்றபோது, பெயரளவுக்கு மட்டும் ரசீது வழங்கியதாகவும், அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story
