Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21.07.2025) | 7 PM Headlines | ThanthiTV
முதலமைச்சர் ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி...
உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்...
துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட குடும்பத்தினர் அப்பல்லோ மருத்துவமனை வருகை...
சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆறுதல்...
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலினை, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார், அமைச்சர் துரைமுருகன்
முதலமைச்சர் நன்றாக இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என பேட்டி...
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்கியது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்...
சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று வெற்றிகரமாக திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு மக்களவையில் பாராட்டு...
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான நான் உட்பட யாரும் பேச அனுமதிக்கப்படுவதில்லை....
மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி குற்றச்சாட்டு...
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம், மாநிலங்களவையில் 9 மணி நேரம் என மொத்தம் 25 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு...
அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு...
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்க வலியுறுத்தி, மக்களவை சபாநாயகரிடம் 145 எம்.பி.க்கள் நோட்டீஸ்...
வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் போர்க்கொடி...
வங்கதேசத்தில் கல்வி வளாகம் மீது ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து...
19 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்...
