மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23.07.2025) | ThanthiTV

x

மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆய்வு...

அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்ட நிலையில்,

விரைவில் மக்களை சந்திக்க வருவேன் என எக்ஸ் தளத்தில் பதிவு...

தமிழக முதலமைச்சர் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை...

அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை....

அரசு முறை பயணமாக இங்கிலாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி...

இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், மன்னர் மூன்றாம் சால்ஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு...

வியட்னாமில் வலுவிழந்து வங்கக் கடலை அடைய உள்ள விபா புயல்...

அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில்,100 நாள் நடை பயணத்தை நாளை மறுநாள் தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...

'உரிமை மீட்க... தலைமுறை காக்க' என்ற லோகோ வெளியீடு...

பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய முதல்வர் நிதீஷ்குமார்....

நீ ஒரு குழந்தை உனக்கு என்ன தெரியும்? என விமர்சனம்...

போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பான வழக்கு...

சென்னை பரங்கிமலையில் 6 வயது மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்...

கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டான்லி மருத்துவமனை கைதிகள் வார்டுக்கு மாற்றம்...

திருப்புவனம் காவல் நிலையத்தில் பத்தாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை...


Next Story

மேலும் செய்திகள்