மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (20.07.2025)

x

10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் அன்புமணி தலைமையில் பாமகவினர் போராட்டம்...

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாமக தொண்டர்கள் பங்கேற்பு...

பாமக எம்.எல்.ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் கட்சியில் இருந்து இடைநீக்கம்...

கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி ராமதாஸ் நடவடிக்கை...

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்...

நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளதை ஒட்டி ஆலோசனை...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் அனைத்து கட்சிகளும் சிறப்பாக செயல்பட்டதாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராட்டு..

நாடாளுமன்றத்தை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை...

இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருவது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்...

அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்