Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21.07.2025) | 11 PM Headlines | ThanthiTV
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா...
உடல்நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுத்ததாக, குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் விளக்கம்...
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் 3 நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்...
மருத்துவமனையில் இருந்தபடி முதலமைச்சர் அலுவல் பணியை மேற்கொள்வார் என தகவல்...
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் இனிமையான பணி உறவுக்கு நன்றி என ஜெகதீப் தன்கர் உருக்கம்...
பிரதமர் மோடியின் அசைக்க முடியாத ஆதரவுக்கு கடமைப்பட்டுள்ளதாகவும் நெகிழ்ச்சி...
முதலமைச்சர் ஸ்டாலினிடம் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார், பிரதமர் மோடி...
சிகிச்சையின் நிலை குறித்தும் கேட்டறிந்தார்...
முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்...
மருத்துவ பரிசோதனை முடிவுக்கு பிறகு, டிஸ்சார்ஜ் குறித்த முடிவு எடுக்கப்படும் எனவும் விளக்கம்...
இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார் இந்திய வீரர் நிதிஷ்குமார் ரெட்டி....
முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகியதாக பிசிசிஐ தகவல்....
