கலங்கிய கண்களுடன் மலேசியாவிலிருந்து உதவி கோரும் தமிழக இளைஞர்

மலேசியாவுக்கு வேலைக்கு சென்று ஏமாற்றப்பட்ட இளைஞர், மீட்கக் கோரி கலங்கி கண்களுடன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கலங்கிய கண்களுடன் மலேசியாவிலிருந்து உதவி கோரும் தமிழக இளைஞர்
Published on

மதுரையை சேர்ந்த தினேஷ்பாபு, கடந்த ஒராண்டுக்கு முன்பு முகவர் மூலம் மலோசியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்குள்ள முகவர் அந்த நாட்டு பணம் 6000 வெள்ளி மற்றும் பாஸ்போர்ட்டினை பெற்று கொண்டு தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட தினேஷ்பாபு உணவு, தங்க இடம், வேலையின்றி பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். நிற்கதியான தனது நிலையை, பிறரின் உதவியுடன் செல்போனில் பதிவு செய்த அந்த இளைஞர், தம்மை மீட்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என கலங்கிய கண்களுடன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com