TN Govt| Tasmac| தமிழகம் முழுக்க டிச.1 முதல் கட்டாயம்

TN Govt| Tasmac| தமிழகம் முழுக்க டிச.1 முதல் கட்டாயம்

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை ஊழியர்கள் 8 மணி நேரம் பணி செய்வதை உறுதி செய்ய ஆன்லைன் வருகைப் பதிவு முறை அமல் படுத்தப்பட உள்ளது டாஸ்மாக் கடையில் வெளிநபர்களைப் பணியில் அமர்த்துவதைத் தடுக்க கையால் பராமரிக்கப்படும் வருகைப் பதிவேடு முறை ரத்து செய்யப்பட்டு, டிசம்பர் 1-ஆம் தேதி முதல் கையடக்கக் கருவி மூலம் ஆன்லைன் வருகைப் பதிவு அமலுக்கு வருகிறது. டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஊழியர்களின் தற்செயல் விடுப்பு, பண்டிகை முன்பணம், பணியிட மாறுதல், மருத்துவச் செலவு மற்றும் ஊதியம் தொடர்பான குறைகளுக்கு இனி அலுவலகங்களுக்கு அலையாமல் கையடக்கக் கருவி மூலமே விண்ணப்பித்து, அதன் நிலையையும் அறிந்து கொள்ளலாம். மேலும், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலை 11.30 முதல் மாலை 7.30 வரையும், மதியம் 2.30 முதல் இரவு 10.30 வரை என இரண்டு ஷிப்ட் முறைகள் அல்லது 1 மணி நேரம் இடைவேளையுடன் கூடிய அதாவது மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்ற முழு நேர பணி ஆகிய பணி முறைகள் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்திற்கு 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மதியம் 12 மணிக்கு முன்னும், இரவு 10 மணிக்குப் பின்னும் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

X