"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.
மாவட்டந்தோறும் தாம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, எதிர்க்கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு ஆட்சியர்கள் மூலம் முறைப்படி அழைப்பு விடுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
வருகிற 29ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், கோயில்களை திறப்பது, ஊரடங்கு தளர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
