வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காசோலைகளை கேரளாவிற்கு அனுப்பி வைப்பதற்காக சபாநாயகர் தனபால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.