குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் மறைவுக்கு இரங்கல் - இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதும் பேரவை ஒத்திவைப்பு

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஆகியோர் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் மறைவுக்கு இரங்கல் - இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதும் பேரவை ஒத்திவைப்பு
Published on
கொரோனா பாதிப்பு தொடரும் நிலையில் தமிழக சட்டப்பேரவை தற்காலிகமாக கலைவாணர் அரங்கில் இன்று கூடியது. உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்கள் 23 பேரின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளை பேரவை தலைவர் தனபால் வாசித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com