இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு

திருவாரூர் அருகே தவிடு வியாபாரியின் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்ச ரூபாயை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு
Published on

தொடர் விடுமுறை காரணமாக, வியாபாரத்திற்காக வங்கியிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை, முருகானந்தம் என்பவர் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். பின்னர் வழியில், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடையில் தேநீர் அருந்திய போது, மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்தனர். இது குறித்து திருவாரூர் காவல்நிலையத்தில் முருகனாந்தம், புகார் அளித்த நிலையில், டீக்கடையில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com