Tiruvannamalai | தி.மலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களே உஷார்

தி.மலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களே உஷார்

Tiruvannamalai | தி.மலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களே உஷார் திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலத்தின்போது, பக்தர்களின் செல்போன்களை திருட முயன்றதாகக் கூறப்படும் கணவன்-மனைவி உள்ளிட்ட 3 பேரை சக பக்தர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டிருந்த நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட மூவர் மீதும் பக்தர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், ரோந்து காவலர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருட்டில் ஈடுபட்டது புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதி மற்றும் சென்னையை சேர்ந்த இளைஞர் என தெரிய வந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com