

திருப்பூர் மார்க்கெட் சாலையில் உள்ள கே. எஸ். சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில், ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஒரு மாணவன், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தன் பள்ளி மாணவர்களை அழைத்து கொண்டு மோதலில் ஈடுபட்டுள்ளார். இந்த மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக 15 மாணவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்ற போலீசார், பெற்றோர்களை வரவழைத்து அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.