Tirupathur | Crime | Robbery | வெள்ளி நகை வியாபாரிக்கு குறி - கத்தி முனையில் கதறவிட்ட கும்பல்

வெள்ளி நகை வியாபாரிக்கு குறி - கத்தி முனையில் கதறவிட்ட கும்பல்

Tirupathur | Crime | Robbery | வெள்ளி நகை வியாபாரிக்கு குறி - கத்தி முனையில் கதறவிட்ட கும்பல் வாணியம்பாடியில் கத்தி முனையில் 38 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கூடுதல் தகவல்களை செய்தியாளர் ​பிரபாகரன் வழங்கிட கேட்கலாம்... திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஜார் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி ஆற்காடு பகுதியைச் சேர்ந்த வெள்ளி நகை வியாபாரி தீபக் என்பவர் 100 கிலோ வெள்ளி பொருட்களை விற்பனை செய்வதற்காக எடுத்து வந்து விற்பனை செய்து மீதி இருந்த 38 கிலோ வெள்ளிப் பொருட்களை காரில் வைக்கும் போது இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கத்தி முனையில் 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த பாபு, நரசிம்மன், மணி, ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 38 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர்..... மேலும் தலைமுறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்....

X

Thanthi TV
www.thanthitv.com