மலையில் இறந்து கிடந்த காட்டு யானை
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்த நிலையில் கிடந்தது. வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், 2 ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் யானை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தந்தத்தால் தாக்கியதில் இதயம் மற்றும் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Next Story
