கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற ஊழியர்கள் - வாக்குவாதம் செய்து கூடுதல் பணத்தை திரும்ப பெற்ற முதியவர்

டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற ஊழியரிடம், முதியவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கூடுதல் பணத்தை திரும்ப பெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற ஊழியர்கள் - வாக்குவாதம் செய்து கூடுதல் பணத்தை திரும்ப பெற்ற முதியவர்
Published on
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்த முதியவரிடம், கடையின் ஊழியர்கள் கூடுதலாக பணம் வாங்கி உள்ளனர். இதனால், ஆவேசம் அடைந்த முதியவர், கூடுதல் பணத்தை ஏன் வாங்குகிறீர்கள் என்று டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு உடைந்த பாட்டில் கணக்குகளை ஈடுகட்ட என டாஸ்மாக் ஊழியர்கள் பதில் சொல்ல, உடைந்த பாட்டில்களை காட்டுமாறு முதியவர் கேள்வி எழுப்பினார். பின்னர் முதியவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட, டாஸ்மாக் ஊழியர்கள் அவரிடம் பெற்ற கூடுதல் தொகையை திருப்பி அளித்தனர். இதோடு நின்று விடாத முதியவர், மற்றவர்களிடமும் வாங்கிய கூடுதல் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு வாக்குவாதம் செய்தார். இதனைத் தொடர்ந்து, மற்றவர்களிடம் வாங்கிய கூடுதல் பணத்தையும் டாஸ்மாக் ஊழியர்கள் திருப்பிக் கொடுத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com