Tirunelveli |Selfie | "சிறிது தவறினாலும் உயிர்போவது உறுதி" - எமனுடன் செல்ஃபி எடுக்கும் இளசுகள்

x

ஆபத்தான பகுதிகளுக்கு சென்று செல்ஃபி எடுக்கும் மாணவர்கள்

நெல்லையில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு பார்வையிட வரும் மாணவர்கள் அருகில் உள்ள ஆபத்தான மலை உச்சிக்கு சென்று செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வருகிறது.

ஆபத்தான மலைப்பகுதி என்பதால் சிறிது தவறினாலும் உயிரிழப்பு ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்