மூடப்படாமல் இருந்த ரயில்வே கேட் : வேகமாக கடந்து சென்ற விரைவு ரயில்

நெல்லை பேட்டையில் ரயில்வே கேட் திறந்திருந்த நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் அப்பகுதியை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை பேட்டையில் ரயில்வே கேட் திறந்திருந்த நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் அப்பகுதியை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் வருவதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள், தங்கள் வாகனங்களை வைத்து தடுப்பு அமைத்து பெரும் விபத்தை தடுத்தனர். பழுதாகி உள்ளதால் ரயில்வே கேட் மூடப்படவில்லை எனவும், அதனை ஓட்டுனருக்கு ஏற்கனவே தெரியப்படுத்தி விட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து பொறுப்பற்ற முறையில் விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com