வடமாநிலத்தவர்கள் கடத்தல் | அதிரடியாய் களத்தில் இறங்கி போலீசார் செய்த செயல்

x

திருச்செங்கோடு அருகே வேலை வாங்கி தருவதாக கடத்தப்பட்ட வடமாநிலத்தவர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் சீனிவாசம் பாளையத்தில் வடமாநிலத்தவர் சிலர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செங்கோடு போலீசார், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 10 பேரை மீட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட 90 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்