காட்டமாக விமர்சித்த அன்புமணி.

x

கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் காலி பணியிடங்கள் - அரசுக்கு கேள்வி

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை எனவும், 9 ஆயிரம் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதன் மூலம் உயர்கல்விக்கு முடிவுரை எழுதுவதாக X பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். ஆகவே, இதில் காலியாக உள்ள முதல்வர்களுக்கான பணியிடங்களையும், 9 ஆயிரத்துக்கும் அதிகமான உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்புப் பட்டியல் தயார் நிலையில் உள்ள நிலையிலும், அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும். இருந்தாலும், அவற்றை நிரப்பாமல் அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்