முருகன் கோயிலில் சரிந்து விழுந்த தகர கொட்டகை - அலறி அடித்து ஓடிய மக்கள்

x

சேலத்தில் பக்தர்களின் நிழலுக்காக அமைத்த தகரங்கள் சூறைகாற்றில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஆத்தூர் அருகே வடசென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நிழலுக்காக தகரக் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், தகரக்கொட்டகைககள் காற்றில் சரிந்த விழுந்தது. இதன் காரணமாக பக்தர்கள் மத்தியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்