மின் தடை புகாருக்கு மிரட்டல்.. தந்தி டிவி செய்தியால் மின் ஊழியர்களுக்கு தக்க பாடம்
தந்தி டிவி செய்தி எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கீழ்ப்பட்டு பகுதியில் தொடர் மின் தடை எனப் புகார் அளித்த நபரை மிரட்டிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர் மின் தடை குறித்து மின் வாரியத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு ஒரு நுகர்வோர் புகார் அளித்ததைக் கண்டித்து, அவரின் வீட்டிற்கு சென்று ராஜா மற்றும் முருகன் ஆகிய 2 மின்வாரிய பணியாளர்கள், மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக, தந்தி தொலைக்காட்சி வாயிலாக வெளியான செய்தி எதிரொலியாக, மின்வாரிய பணியாளர் முருகனை பணியிடை நீக்கம் செய்து போளூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
Next Story