எஸ்.ஐ-க்கும் ஏட்டு-க்கும் கத்தியை காட்டி சேட்டை.. இளைஞர்களுக்கு காத்திருந்த ஆப்பு
நாமக்கல்லில் எஸ்.ஐ., ஏட்டுவை தாக்கிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் செட்டியண்ணன், ஏட்டு ராஜ்மோகன் என்பவரும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாமக்கல் - துறையூர் சாலை கொசவம்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை தணிக்கை செய்ய சென்ற போது, சாலையின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு அந்த இடத்தில் 4 பேர் இருந்தனர்.
அவர்களிடம் எஸ்.ஐ. செட்டியண்ணன் விசாரித்த போது, குடிபோதையில் இருப்பதாகவும், வழக்கு போட்டு விடுவீர்களா ? என வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதை அவர்களில் ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். வாக்குவாதம் முற்றியதில், 3 பேர் சேர்ந்து எஸ்.ஐ மற்றும் ஏட்டுவை சரமாரியாக தாக்கி உள்ளனர். அவர்களில் ஒருவர் எஸ்.ஐயை கத்தியால் குத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த எஸ்.ஐ செட்டியண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் என்.கொசவம்பட்டியை சேர்ந்த விஜய், அஜித்குமார், ஞானசேகரன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
