Dindigul Crime | பள்ளி மாணவியை மிரட்டி நகையை பறித்த காதலன் | தட்டி தூக்கிய போலீசார்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மாணவியை மிரட்டி, 13 பவுன் நகையை பறித்ததாக மாணவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வத்தலகுண்டை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் தன்னுடன் படித்த மாணவியை காதலித்ததுடன், வீட்டில் கஷ்டம் என கூறி, அவரிடம் சிறிது சிறிதாக 13 பவுன் நகைகள் வரை கறந்ததாக தெரிகிறது. இந்நிலையில், மேலும் அவரிடம் நகைகளைக் கேட்டு தொல்லை கொடுத்ததுடன், தர மறுத்தால் கொலை செய்து விடுவதாக மாணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், அச்சமடைந்த அந்த மாணவி மேலும் நகைகளை எடுத்து கொடுத்துள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர் வத்தலகுண்டு போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில், போலீசார் அந்த மாணவனையும், அவனுக்கு உடந்தையாக இருந்த விராலிப்பட்டியை சேர்ந்த கார்த்திக்கையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மூன்று பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
