கணவரை இழந்த பெண்ணுடன் கூடா பழக்கம் - மனைவிபோல் குடும்பம் நடத்திய இளைஞர்!..கொதித்தெழுந்து கூலிப்படை..

கணவரை இழந்த பெண்ணுடன் கூடா பழக்கம் - மனைவிபோல் குடும்பம் நடத்திய இளைஞர்!..கொதித்தெழுந்து கூலிப்படை..
Published on

கணவரை இழந்து தனியே வசித்த வந்த பெண்ணுடன் இளைஞர் குடும்பம் நடத்தி வந்த ஆத்திரத்தில், பெண்ணை இளைஞரின் அக்கா ஆட்களை ஏவி கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் கணவரை பறிகொடுத்த இவர், தனது 3 குழந்தைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், புதியம்புத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் காளியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கணவர் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கு ராமச்சந்திரனின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கோவையில் வசித்து வந்த ராமச்சந்திரனின் சகோதரி விஜயலட்சுமி இதையறிந்து கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். உடனே, சகோதரருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற அவர், காளியம்மாளுடனான உறவை சகோதரர் கைவிட மறுத்தததால் காளியம்மாளை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். சுமார் 70 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து கூலிப்படை ஒன்றை காளியம்மாளின் வீட்டிற்கு விஜயலட்சுமி ஏவிய நிலையில், கால்நடை மருத்துவர்போல் வேடமிட்டு காளியம்மாளின் வீட்டிற்குள் கும்பல் நுழைந்திருக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com