தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு : சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இது வரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு : சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ
Published on
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, சிபிஐ இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு, மீண்டும் நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது சிபிஐ தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணை குறித்தும் மேலும் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் என சிபிஐ தரப்பில் கூறியதையடுத்து. வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com