தி.மலை உச்சியில் இருந்து கீழே இறக்கப்பட்ட மகா தீப கொப்பரை
திருவண்ணாமலையில், 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரை மலையில் இருந்து கீழே இறக்கப்பட்டு கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த 13ம் தேதி மாலையில், மகா தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 11 நாட்கள் ஜோதிப்பிழம்பாய் அண்ணாமலையார் மலை உச்சியிலிருந்து காட்சியளித்தார்.
மகா தீபம் நிறைவடைந்த நிலையில், மலை உச்சியில் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலையில் இருந்து இறக்கி கொண்டுவரும் பணி நடைபெற்றது.
375 கிலோ எடை கொண்ட மகா தீப கொப்பரையை, பர்வத ராஜகுல மரபினர் 30-க்கும் மேற்பட்டோர் தோளில் சுமந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
Next Story
