Thiruvannamalai | Maha Shivratri | திருவண்ணாமலையில் மெய்சிலிர்க்க வைத்த இசைமழை

திருவண்ணாமலையில் மெய்சிலிர்க்க வைத்த இசைமழை

42-ம் ஆண்டு மகா சிவராத்திரி - கலைஞர்களின் இசை வழிபாடு சிவராத்திரியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோவிலில், நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் பல்வேறு ராகங்களை இசைத்து சுவாமியை வழிபட்டனர். மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பஞ்சபூத ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில், ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். 42ம் ஆண்டிற்கான இந்த மகா சிவராத்திரி விழாவில், பல்வேறு நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் பங்கேற்று, விழாவை சிறப்பித்தனர். இதில், சங்கராபரணம், காம்போதி, கல்யாணி உள்ளிட்ட பல்வேறு ராகங்களை இசைத்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com