Thiruvannamalai | Lightning | அப்பாவுக்கு உதவ போன மகனுக்கு நடந்த துயரம்
ஆரணி அருகே இடி தாக்கி பட்டதாரி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சென்னந்தல் கிராமத்தில் வசித்து வரும் எழுமலை என்பவர் கல்லூரி முடித்துவிட்டு, தனது தந்தைக்கு உதவியாக விவசாய நிலத்தில் வேலை செய்துவந்துள்ளார். இந்த நிலையில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, இடி, இடித்ததில் எழுமலை மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செனறனர். எழுமலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story
