வீடுகள் மீது சரிந்த பாறைகள்.. -உள்ளே துடிக்கும் 5 குழந்தைகளின் இதயம்..

x

திருவண்ணாமலை வ உ சி நகர் 9, 10, 11வது தெருவில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாக மலையில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மண்ணரிப்பினால் வ உ சி நகர் பகுதியில் வசிக்கும் மூன்று வீடுகளில் கற்கள், மண்கள் சூழ்ந்துள்ளது.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் இருந்தனர் என அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அந்தப் பகுதியில் இரவு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.தற்போது இந்த பகுதியில் மண் சரிவு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாலும், பாறைகள் உருண்டு உள்ளதாலும், மழை நீர் இன்னும் வந்து கொண்டு இருப்பதால் இரவு மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியாது எனவும், காலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அழைக்க உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்குமாரின் தங்கை மீனாட்சி கூறுகையில் வீட்டில் தனது மகள் மற்றும் அவரது அண்ணன் ராஜ்குமார் அவரது மனைவி மீனா மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் அண்ணன் மகள்கள் இருவர் என ஏழு நபர்கள் உங்க வீட்டில் இருப்பதாகவும், அவர்களது நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த வீட்டில் சிக்கியிருப்பவர்கள் ராஜ்குமார் அவரது மனைவி மீனா, ரம்யா, இனியா, கௌதம், மகா, ரோகினி ஆகியோர் என தெரிய வருகிறது.

இதுகுறித்து கூறிய சரவணன் மாலை மண்சரிவு ஏற்பட்டதுடன் இந்த பகுதியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அருகில் உள்ள பள்ளியில் மற்றும் திரையரங்கில் தங்க வைத்துள்ளதாகவும் மேலும் அந்த வீட்டில் ஏழு நபர்கள் சிக்கி உள்ளதாகும் அவர்களது நிலைமை கேள்விக்குறியாக உள்ளதாகவும் சரவணன் தெரிவித்தார். நாளை காலை மீட்பு பணிகள் நடைபெறும் என தற்போது தெரிய வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்