அதிமுக கொடியேற்ற விழாவில் அலைமோதிய கூட்டம் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பகுதிகளில் செய்யாறு அதிமுக சட்டபேரவை உறுப்பினர் தூசிமோகன், தனது ஆதரவாளர்களுடன் கட்சிக் கொடியை ஏற்றி கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் வழங்கி வரும் நிகழ்ச்சி தினசரி நடைபெற்று வருகிறது.
அதிமுக கொடியேற்ற விழாவில் அலைமோதிய கூட்டம் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்
Published on

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பகுதிகளில் செய்யாறு அதிமுக சட்டபேரவை உறுப்பினர் தூசிமோகன், தனது ஆதரவாளர்களுடன் கட்சிக் கொடியை ஏற்றி கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் வழங்கி வரும் நிகழ்ச்சி தினசரி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, எம்ஜிஆர், ஜெயலலிதா போல் வேடமிட்ட நடனக்கலைஞர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு நடனம் ஆடினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு புடவை, சில்வர் தட்டு, இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் நோய் பரப்பும் விதத்தில் சட்டமன்ற உறுப்பினர் நடந்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com