திருப்பரங்குன்றம் மலையில் பாதுகாப்பை அதிகரிக்க பறந்த உத்தரவு

x

திருப்பரங்குன்றம் மலையில் பாதுகாப்பை அதிகரிக்க பறந்த உத்தரவு

தைப்பூசத்தையொட்டி திருப்பரங்குன்றம் மலையில் பாதுகாப்பை அதிகரிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்ஹா வழிபாடு விவகாரத்தில் கடந்த 3 மாதங்களாக இரு தரப்பினர் இடையே போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தர வாய்ப்புள்ளதால் பாதுகாப்பை அதிகரிக்க ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். பக்தர்கள் குவியும் பட்சத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஆட்சியர் மேற்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்