இன்ஜினில் இருந்து வந்த கரும்புகை - தீப்பிழம்பாய் வெடித்து சிதறிய சொகுசு கார்
தஞ்சை பட்டுக்கோட்டையில் நகரின் மையப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மகிழங்கோட்டையை சேர்ந்த நபர் தனது உறவினரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இன்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறி கார் தீப்பற்றிய நிலையில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story