திருச்செந்தூர் கோயிலில் திருப்புகழை மெய்சிலிர்க்க பாடிய சிறுமி

x

திருச்செந்தூர் முருகன் கோயிலில்108 ஓதுவார் மூர்த்திகளுடன் அமர்ந்து திருப்புகழ், கந்தர் அலங்காரம் உள்ளிட்ட பக்தி பாடல்களைப் பாடி, சிறுமி தியா மெய்சிலிர்க்க வைத்தார். திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, 9 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து தமிழில் வேத பாராயணம், 108 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன் திருப்புகழ், தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவை பாடப்பட்டன. இதில், பக்தி பாடகி திருப்புகழ் தியா என்ற சிறுமி 12 திருமுறைகள், சண்முகர் சரணம் உள்ளிட்டவற்றை மனமுருக பாடி அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்