கோயில் சாவியை கேட்ட மேல்பாதி ஊர் மக்கள் - போலீசார் சொன்ன பதில்

x

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபர் கோவிலுக்குள் சென்று வழிபட்டதால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2023-ல் கோவில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கோவில் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பட்டியல் சமூக மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், ஊர் மக்கள் கோவிலின் சாவியை தங்களிடம் ஒப்படைத்தால் பரிகார பூஜை செய்துவிட்டு கோவிலை தாங்களே பராமரித்துக் கொள்கிறோம் என காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு போலீசார் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்