Vedaranyam Sea | திடீரென சேறும் சகதியுமாக மாறிய கடல்..மீனவர்கள் அதிர்ச்சி
திடீரென சேறும் சகதியுமாக மாறிய கடல்..மீனவர்கள் அதிர்ச்சி
#vedaranyam #sea #nagapattinam #thanthitv
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் பகுதியில், கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. இதனால் கடற்கரை பகுதி சகதியாக காணப்படுகிறது. சேறும் சகதியுமாக இருப்பதால், மீனவர்கள் தங்களது படகுகளை கடலுக்குள் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், கடற்கரையில் ஏராளமான படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.மேலும், மீனவர்கள் நடமாட்டம் குறைந்ததால் புஷ்பவனம் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
