துயரத்தையும் தந்த மழை - தஞ்சை விவசாயியின் கண்ணீர் பேட்டி

x

Thanjavur Farmer || துயரத்தையும் தந்த மழை - தஞ்சை விவசாயியின் கண்ணீர் பேட்டி

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - உரிய நிவாரணம் தரக் கோரிக்கை

தஞ்சை மாவட்டத்தில் பெய்த கோடை மழை எதிரொலியாக, அறுவடைக்கு தயாராக இருந்த 1,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. திருவோணம், உஞ்சிய விடுதி, தளிகை விடுதி, காடுவெட்டி விடுதி உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியாக பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட நெல் சாகுபடி பரப்புகளை, வேளாண்மை துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The Rain That Brought Sorrow Too – A Tearful Interview with a Thanjavur Farmer


Next Story

மேலும் செய்திகள்