பொம்மை காரிலிருந்து வந்த சத்தம் - காரை நகர்த்தியதும் காத்திருந்த அதிர்ச்சி

கண்ணூரில் குழந்தைகள் விளையாடும் பொம்மை காரின் அடியில் கேட்ட திடீர் சத்தம், காரினை விலக்கிப் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி அதன் அடியில் பதுங்கி இருந்த சுமார் 9 அடி நீளம் கொண்ட ராட்சச எடை கொண்ட ராஜ நாகம் பிடிபட்டது

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட செருவன்ஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் இவர் தனது குழந்தைகள் விளையாடுவதற்காக பொம்மை கார் ஒன்று வீட்டில் வாங்கி வைத்துள்ளார் அப்போது திடீரென, சம்பவத்தன்று இரவு நேரத்தில் அந்த காரின் அடியில் இருந்து சத்தம் கேட்டது, அதனை விலக்கிப் பார்த்தபோது ராஜநாகம் ஒன்று பதுங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்துள்ளார், இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் அந்த ராஜ நாகத்தை பாதுகாப்பாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர், அந்த நேரத்தில் அவரின் குழந்தைகள் எதுவும் அந்தக் காரினை உபயோகப்படுத்தாதால் அசம்பாவிதமானது தவிர்க்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com