"பாகிஸ்தான் அனுப்பிய அந்த மெசேஜ்... போர் நிற்க இதுதான் காரணம்" - உடைத்து சொன்ன ராஜ்நாத் சிங்

x

"பாகிஸ்தான் அனுப்பிய அந்த மெசேஜ்... போர் நிற்க இதுதான் காரணம்" - நாடாளுமன்றத்தில் உடைத்து சொன்ன ராஜ்நாத் சிங்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றுவதாக கூறினார்.

இந்திய மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே தாக்குதல் நடத்தப்பட்டது என்றும்,

பாகிஸ்தானில் தீவிரவாத இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும், ஆபரேஷன் சித்தூரில் பாகிஸ்தானை சேர்ந்த சாமானிய மக்கள் யாரும் குறிவைக்கப்படவில்லை என்றும் கூறினார்.

போரை நிறுத்த முதலில் பாகிஸ்தான் நாடே கோரிக்கை விடுத்தது என்றும், பாகிஸ்தானின் விமான தளங்கள் தாக்கப்பட்டதும், தாக்குதலை நிறுத்த அந்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர் என்று கூறினார்.

வெறும் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகளை சேர்ந்தவர் என்று தெரிவித்தார்.

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியா எந்த அழுத்தத்திற்கும் அடி பணியவில்லை என்றும், முப்படைகளின் அசாத்திய ஒருங்கிணைப்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றும் தெரிவித்தார்.

எதிரி நாட்டின் எத்தனை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேட்கவில்லை என்றும், மாறாக நமது நாட்டு போர் விமானம் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை தான் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர் என்றும் விமர்சித்தார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகள் நாட்டு மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இல்லை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்