மயக்கத்தால் நடந்த மேஜிக்.. 15 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்த அப்பா-மகன்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தனியாக வசித்து வந்த ராஜேந்திரன், திடீரென மயங்கி விழுந்த நிலையில், அங்கிருந்த மனிதநேய மக்கள் கட்சியினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு உறவினர்கள் குறித்து கேட்ட நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பே, கருத்து வேறுபாட்டால் குடும்பத்தை பிரிந்து வந்ததாக ராஜேந்திரன் தெரிவித்தார். இதையடுத்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில் ராஜேந்திரனின் மகன், அவரை மருத்துவமனையில் பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com