வெகுவிமரிசையாக நடந்த கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா
விமரிசையாக நடந்த கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா .
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில், புனித அந்தோணியார், செபஸ்தியார், காவல் சம்மனசு, புனித சவேரியார் ஆகியோரின் சிலைகள் மின் விளக்குகளால் அலங்கரித்து கமுதி நகர் முழுவதும் தேர்பவனி நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் பூமாலைகள், பொரிகடலை, உப்பு மற்றும் மெழுகுவர்த்தி படைத்து அந்தோணியாரின் அருளைப் பெற்றனர். பிரசாதமாக அனைவருக்கும் உப்பு கலந்த பொரிகடலை வழங்கப்பட்டது.
Next Story
