மீண்டும் லண்டன் புறப்பட்ட பாதி வழியிலேயே சென்னை திரும்பிய விமானம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம் 209 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் விமானம் அரபிக்கடல் எல்லையில் பறந்து கொண்டிருந்த போது மத்திய கிழக்கு நாடுகள் அருகே வான் எல்லை மூடப்பட்டதாக விமானிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே விமானம் திரும்பியது. சென்னையில் விமானம் தரையிறங்கியதும் பயணிகள் ஓய்வறையில் தங்க வைக்கபட்ட நிலையில் சில மணி நேரத்தில் வான் எல்லை திறக்கப்பட்டதாக தகவல் வந்ததை தொடர்ந்து விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது.
Next Story
