பிஞ்சு குழந்தைகளையும் கொத்தடிமையாக மாற்றிய கொடூரம் - திருப்பத்தூரில் நடந்த காரணம்?
ரூ.10 ஆயிரம் கடனுக்கான கொத்தடிமைகளாக இருந்த 7 பேர் மீட்பு
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்திற்குட்பட்ட காமனூர்தட்டு பகுதியில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 7 பேர் மீட்கப்பட்டனர். இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மகாவிஷ்ணு என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கடன் வாங்கியதற்காக ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 7 பேர் கொத்தடிமைகளாக பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் மீட்டனர். மேலும், இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
