பசியில் கதறி அழுத குழந்தை - ஆத்திரத்தில் தி.மலை கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த தாய்

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஊழியர்களுடன் ஆந்திராவைச் சேர்ந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலையார் கோவில் பராசக்தி அம்மன் சன்னதிக்கு குழந்தையுடன் வந்த ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியர் தரிசனம் செய்ய வரிசையில் சென்றுள்ளனர். அப்போது, குழந்தை பசி எடுத்து அழுத நிலையில், கதவை திறந்து விடுங்கள்... நாங்கள் வெளியே சென்றுவிடுகிறோம் என அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் கோவில் ஊழியர்கள் மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த பெண், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்