தலை துண்டாகி திண்டுக்கல்லில் வீசப்பட்ட கடலூர் இளைஞரின் உடல்.. சிதைந்து கிடந்த கொடூரம்
பண்ருட்டி பகுதியை சேர்ந்த 24வயது பி.டெக் பட்டதாரி இளைஞர், கொடைரோடு அருகே, கரட்டு பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த, ஒருத்தட்டு கிராமம் அருகே அடையாளம் தெரியாத உடல் ஒன்று சிதைந்த நிலையில் இரு துண்டுகளாக கிடந்துள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார், சடலத்தின் அருகே இருந்த அடையாள அட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கடலூரை சேர்ந்த சம்பத் என்பதும், ஸ்ரீபெரும்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று உயிரிழந்த இளைஞரின் சகோதரர் ஸ்ரீபெரும்புத்தூர் காவல் நிலையத்தில் தனது அண்ணணைக் காணவில்லை என புகார் அளித்துள்ள நிலையில், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
