கொடுமைப்படுத்திய எஸ்ஐ, மகன்.. "கேவலமா கெட்ட வார்தல்லாம் சொல்றாங்க.."
வரதட்சணை கொடுமை செய்த எஸ்ஐ மகன்-பெண் புகார்
வேலூரில் கூடுதலாக வரதட்சனை கேட்டு, மாடியில் இருந்து தள்ளி விட்டதாக, மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் ஆம்புலன்ஸில் வந்து புகாரளித்துள்ளார். வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகள் நர்கீஸ் என்பவருக்கும் திருவண்ணாமலை செய்யாறு பகுதியை சேர்ந்த, தமிழ்நாடு காவல்துறை உதவி காவல் ஆய்வாளர் பாபா என்பவரின் மகன் காஜாரபீக் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் காஜாரபீக், நர்கீஸை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் இடுப்பு மற்றும் கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நர்கீஸ், ஆம்புலன்ஸில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.
Next Story
