பெரும் துயரிலும் பேனாவை பிடித்த மாணவி! கண்கலங்க வைத்த சம்பவம்
தாய் உயிரிழந்த நிலையிலும் தேர்வெழுதிய 12-ம் வகுப்பு மாணவி
பட்டுக்கோட்டை அருகே தாய் உயிரிழந்த நிலையிலும் படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் மகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த காவ்யா என்ற மாணவி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், காவ்யாவின் அம்மா கலா திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் மாணவி காவ்யா தேர்வெழுத செல்லும் முன்பு, உயிரிழந்த தனது தாயின் காலில் விழுந்து கதறி அழுதபடியே ஆசீர்வாதம் பெற்று தேர்வெழுத சென்ற சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.
Next Story
