பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை பலி - பெற்றோர்களே உஷார்

x

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்- சிவகாமி தம்பதி, தங்கள் 7 மாத ஆண் குழந்தை திடீரென மயக்கம் அடைந்ததாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையின் உடலை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தையின் வயிற்றில் பலூன் இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்